தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாருக்கு அமைச்சர் உத்தரவு

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாருக்கு அமைச்சர் உத்தரவு

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாருக்கு அமைச்சர் உத்தரவு


UPDATED : அக் 24, 2026 01:17 AM

ADDED : அக் 24, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 01:17 AM ADDED : அக் 24, 2026 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையொட்டி புதுச்சேரியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் சீனியர் எஸ்.பி.,க்கள் நாரா சைதன்யா, திவ்யா மற்றும் பக்தவச்சலம் எம்.பி., இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, வேலையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, ‘தொடர் விடுமுறை வருவதால் புதுச்சேரியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பினை பலத்தப்படுத்த வேண்டும். குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கவனம் செலுத்தி ஒழுங்கு படுத்த வேண்டும்.

இந்திராகாந்தி சிலை, ராஜிவ்காந்தி சிலை, காமராஜர் சாலை போன்ற முக்கிய சந்திப்புகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும். வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட வேண்டும்’ என உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் ‘பார்க்கிங்’ பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தற்காலிக ‘பார்க்கிங்’ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

‘பார்க்கிங்’ பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல, பொதுமக்கள் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். வாகனங்களை சாலையில் நிறுத்தும் போது, அவற்றை பின்புறமாக நிறுத்த பழக வேண்டும்.

முக்கிய சாலைகளில் ஒரு பக்கத்தில் மட்டும் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசலுக்கும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us