தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இசை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா

இசை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா

இசை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா


UPDATED : அக் 24, 2026 01:17 AM

ADDED : அக் 24, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 01:17 AM ADDED : அக் 24, 2026 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இசை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் நலச் சங்கம் சார்பில் மூத்த இசை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில், சங்க தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

சங்க தலைவர் முத்து, கலைமாமணி தமிழ்வாணன், பின்னணி பாடகர் ஜெயமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

செயலாளர் சரவணன் நோக்க உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர் ராஜவேலு, புதுச்சேரி பாடகர் கிருஷ்ணா, இசை கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.

இதில் சிறந்த கலைஞர்களுக்கு, எம்.எஸ்.வி., விருது, விஜயகாந்த், மலேசியா வாசுதேவன், பாரதிராஜா, பாக்கியராஜ், பாடகி ஜானகி, வாணி ஜெயராம் விருதுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, சமீபத்தில் மறைந்த திரையுலக கலைஞர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us