UPDATED : அக் 24, 2026 01:17 AM
ADDED : அக் 24, 2026 01:14 AM
புதுச்சேரி: சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு சிறப்பு ஊதியம் வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவது வழக்கம்.
அதன்படி, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள், காவலர்கள், ஐ.ஆர்.பி.என். காவலர்கள், மற்றும் அமைச்சக ஊழியர்களுக்கு, 5 கோடியே, 27 லட்சத்து, 32 ஆயிரத்து 556 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை வீர்களுக்கு 42 லட்சத்து, 62 ஆயிரத்து, 730 ரூபாய் சிறப்பு ஊதியமாக வழங்கப்பட உள்ளது. மொத்தம் 5 கோடியே, 69 லட்சத்து 95 ஆயிரத்து 286 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த ஊதிய தொகை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் பண பரிமாற்றம் மூலம் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பை, அரசு சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ளார்.
