UPDATED : நவ 14, 2026 06:23 PM
ADDED : நவ 14, 2026 06:23 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
விரிவுரையாளர் அனுசியா எடல் குயின் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கினார். அமைச்சர் சிவக்கொழுந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். விரிவுரையாளர் மணிமொழி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியை பார்வதி நன்றி கூறினார்.
