தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர் துவக்கி வைப்பு

 விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர் துவக்கி வைப்பு

 விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர் துவக்கி வைப்பு


ADDED : பிப் 16, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 07:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அபயம் தொண்டு நிறுவனம், நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கடற்கரை சாலை, தலைமைச் செயலகம் எதிரே நடந்த ஊர்வலத்தை அமைச்சர் லட்சுமிநாராயணன், போக்குவரத்து எஸ்.பி., ரட்சனா சிங் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

ஊர்வலத்தில், நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பினைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ரகுமான் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நிசார், ஆண்டவர் அறக்கட்டளை நிறுவனர் முத்துராமன், உயிர்த்துளி ரத்த தான அமைப்பின் தலைவர் பிரபு, அம்மு கிளினிக் மருத்துவமனையின் தலைவர் அமுதவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை அபயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சுந்தர முருகன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us