/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.2.13 கோடியில் மேம்பாட்டு பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
ரூ.2.13 கோடியில் மேம்பாட்டு பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ரூ.2.13 கோடியில் மேம்பாட்டு பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ரூ.2.13 கோடியில் மேம்பாட்டு பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 09, 2026 05:27 AM

பாகூர்: ஏம்பலம் தொகுதியில், 2.13 கோடி ரூபாய் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் லட்சுமிநாராயணன், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு சார்பில், ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனை சந்திப்பு முதல் கிருமாம்பாக்கம் எம்.எல்.ஏ., அலுவலகம் வரை, சாலையோரம் உள்ள சின்ன ஏரி நீர் வழங்கல் வாய்க்காலில், 470 மீட்டர் நீளத்திற்கு இரு புறமும், சிலாப்புடன் கூடிய 'யூ' வடிவ வாய்க்கால் அமைக்க 1 கோடியே 52 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இப்பணி துவக்க விழாவில் நடந்தது. அமைச் சர் லட்சுமி நாராயணன், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பிள்ளையார்குப்பம் பேப்பர் மில் சாலை, பனித்திட்டு சாலை சந்திப்பில், 23 லட்சத்து 12 ஆயிரத்து 133 ரூபாய் செலவில், ரவுண்டான மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக் கவும், கிருமாம்பாக்கத்தில் பழுதான 'யூ' வடிவ வாய்க்காலை 37 லட்சத்து 73 ஆயிரத்து 533 ரூபாய் செலவில், மறு சீரமைப்பு செய்யும் பணியினை துவக்கி வைத்தனர்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சந்திரகுமார், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சரவணன், இளநிலை பொறியாளர் அர்ஜூனன், ஒப்பந்தாரர்கள் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

