/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைச்சர் திறந்து வைப்பு
/
சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைச்சர் திறந்து வைப்பு
சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைச்சர் திறந்து வைப்பு
சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைச்சர் திறந்து வைப்பு
ADDED : மே 17, 2025 12:19 AM

புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரி அருகே புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் மையத்தை அமைச்சர் லட்சுமிநாராயணன் திறந்து வைத்தார்.
ராஜ்பவன், முத்தியால்பேட்டை தொகுதி, சின்னையாபுரம், டி.வி.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் சுத்தமான குடிநீர் கேட்டு, பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்த கோரிக்கை விடுத்தனர்.
அவரது முயற்சியால் பிரான்ஸ் நாட்டின் ஹாமப் தொண்டு நிறுவனம், சென்னை கிராமப்புற ஏழைகளுக்கான ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், பாரதிதாசன் மகளிர் கல்லுாரி அருகே புதிதாக சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கி, சுத்திகரிப்பு குடிநீர் மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.