/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவி வழங்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
நலத்திட்ட உதவி வழங்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
நலத்திட்ட உதவி வழங்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
நலத்திட்ட உதவி வழங்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : பிப் 07, 2026 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி அனைத்து குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
லிங்காரெட்டிப்பாளையம் விநாயகர் கோவில் வளாகத்தில் நடந்த விழாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம், அவரது துணைவியார் வசந்தி ஆகியோர் தலைமை தாங்கி, தனது சொந்த செலவில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சந்தை புதுக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.