/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்தில் அமைச்சர் காயம் முதல்வர் நலம் விசாரிப்பு
/
விபத்தில் அமைச்சர் காயம் முதல்வர் நலம் விசாரிப்பு
ADDED : ஜூன் 23, 2025 04:57 AM

புதுச்சேரி : புதுக்கோட்டையில் கார் விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அமைச்சரை முதல்வர் ரங்கசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உறவினர் காதணி விழாவில் பங்கேற்க புதுச்சேரி அரசு காரில் சென்ற வேளாண்மை துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் கார், புதுக்கோட்டை மாவட்டம், பூச்சிக்கடை அருகில் விபத்தில் சிக்கியது.
இதில் அமைச்சர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அமைச்சர் தேனீ ஜெயக்குமாரக்கு, எல் 1 முதுகு தண்டு எலும்பில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்போலோ மருத்துமனைக்கு நள்ளிரவில் அழைத்து செல்லப்பட்டார். அவரை திண்டிவனத்தில் முதல்வர் ரங்கசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.