/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
/
கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
ADDED : ஜூலை 11, 2025 04:03 AM
புதுச்சேரி: கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரின் பேரில், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார்.
ரெட்டியார்பாளையம் தொகுதி, மூகாம்பிகை நகர் அருகே இயங்கி வரும் கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுப்பணித்துறை அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில், அமைச்சர் லட்சுமி நாராயணன், நேற்று கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, மக்களை சந்தித்து குறைகளை கேட்ட றிந்தார்.
அப்போது, சுத்திகரிப்பு நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் அமைப்பின் செயல்பாட்டை மக்களுக்கு விளக்கினார்.
மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் கழிவுநீரில் தொழிற்சாலை கழிவுகள் ஏதேனும் கலந்து வருகிறதா என ஆய்வு செய்து, அதன் மீதுநடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்த புதிதாக காற்றை உள்ளே தள்ளும் கருவி அமைக்கவும் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, சிவசங்கர் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.