/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்ட உதவிக்கான வருமான உச்ச வரம்பு 3 லட்சமாக உயர்வு அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

ADDED : மார் 15, 2024 05:53 AM
புதுச்சேரி: சட்ட உதவிகளை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரியில் வாழும் மக்கள் சட்டப்பணிகள் ஆணைய குழுவின் பணி சேவைகளை பெற வேண்டுமெனில்,அவரது ஆண்டு வருமானம் எல்லா வகையான வருமானத்தை சேர்த்து 15 ஆயிரமாக இருக்க வேண்டும் என இருந்தது. இந்த தொகையை காட்டிலும் அதிகமாக இருந்ததால் சட்டப்பணிகள் சேவை பயன்களை பெற இயலாது. கடைசியாக இந்த தொகையை கடந்த 2012ம் ஆண்டு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படப்டது.
தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட், முதல்வர் ஆகியோரின் ஒப்புதலின்படி, இந்த வருமான உச்ச வரம்பு 3 லட்சமாக உயர்த்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எனவே ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பொதுமக்கள் சட்ட உதவி பணிகள் ஆணையத்தின் மூலம் சட்ட உதவிகளை பெறுவதற்கு இது வாய்ப்பளிக்கும். வறுமை நிலையில் உள்ள வழக்காடிகள் கட்டணம் இல்லாமல் நீதி பெறுவதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.