/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தும் பணி துவக்கம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

ADDED : டிச 05, 2024 06:41 AM
புதுச்சேரி: பொதுப்பணித் துறையின் 1378 வவுச்சர் ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்ட சம்பளம் 18 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தும் பணி துவங்கியுள்ளது.
முதற்கட்டமாக காரைக்கால் வவுச்சர் ஊழியர்களுக்கு செலுத்தப்பட்டது. புதுச்சேரி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
அதற்கான அரசாணை வெளியிடாததால், வவுச்சர் ஊழியர்கள் மிகுந்த மனஉலைச்சலுக்கு ஆளாகினர்.
தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, வவுச்சர் ஊழியர்களின் மாத சம்பளத்தை ரூ.18 ஆயிரமாக உயர்த்தும் நிதித்துறை அனுப்பிய கோப்பிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் பொதுப்பணித் துறையின் 1,378 வவுச்சர் ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்ட சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தும் பணியை நேற்று அரசு துவக்கியது.
இது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், 'பொதுப்பணித் துறையின் 1378 வவுச்சர் ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்ட சம்பளம் 18 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தும் பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக நேற்று காரைக்கால் வவுச்சர் ஊழியர்களுக்கு செலுத்தப்பட்டது.
இன்று 5ம் தேதி இரண்டாம் நாளாக புதுச்சேரி வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் செலுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், வவுச்சர் ஊழியர்கள் 1,378 பேர் பயனடைய உள்ளனர்' என்றார்.