/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பழமையை அறிந்து கொள்ள வரலாற்று நுால்களை படிக்க வேண்டும் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேச்சு

ADDED : ஜன 23, 2026 05:37 AM

புதுச்சேரி: புதுச்சேரியின் பழங்கால வரலாற்றை அறிந்து கொள்ள வரலாற்று நுால் களை படிக்க வேண்டும் என, அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.
புதுச்சேரி செயின்ட் லுாயிஸ் வீதியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில், எம்.பி., ராமன் எழுதிய 'பிரெஞ்சிந்தியா பிரான்சிலிருந்து விடுவிப்பும் இந்தியாவுடன் இணைப்பும்', ராமதாசு எழுதிய 'புதுச்சேரியின் அடையாளங்கள்' இரண்டாம் தொகுதி ஆகிய நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது.
முதல் நுாலை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட செல்வகணபதி எம்.பி., பெற்றுக் கொண்டார். பின், அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், 'முதலாம் நுாற்றாண்டில் ரோமானியர்களுடன் புதுச்சேரியில் வர்த்தகம் நடந்ததற்கான அடையாளங்கள் இன்று வரை அரிக்கமேட்டில் உள்ளது.
இந்தியாவில் தோன்றிய பல்வேறு நாகரிகங்கள் குறித்த வரலாற்று ஆய்வுகள் கண்டுபிடிக்கப்பட்டது போல், புதுச்சேரியும் பல் வேறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகத்துடன் இருந்ததற்கான தரவுகளும் ஆய்வுகளில் உள்ளது. புதுச்சேரியின் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த நுால்களை நாம் படிக்க வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழக்கறிஞர் கும ரன், அறிவன், பிரபு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.