/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.9 கோடியில் ஆஸ்ட்ரோ டாப் ஹாக்கி மைதானம் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
/
ரூ.9 கோடியில் ஆஸ்ட்ரோ டாப் ஹாக்கி மைதானம் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ரூ.9 கோடியில் ஆஸ்ட்ரோ டாப் ஹாக்கி மைதானம் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ரூ.9 கோடியில் ஆஸ்ட்ரோ டாப் ஹாக்கி மைதானம் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ADDED : மார் 27, 2025 03:55 AM
புதுச்சேரி: சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம், விளையாட்டு துறை சம்மந்தமான வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு;
உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள தடகள ஓடுதளம் மத்திய அரசின் கேலோ - இந்தியா திட்டத்தின் மூலம் ரூ. 7 கோடி செலவில் சின்தடிக் ஓடுதளமாக புதுப்பிக்கப்பட்டு வரும் மாதம் திறக்கப்பட உள்ளது. உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் ஆஸ்ட்ரோ டாப் ஹாக்கி மைதானம் இந்த நிதியாண்டில் ரூ. 9 கோடியில் அடிக்கல் நாட்டப்படும்.
பாகூரில் அமைந்துள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் ஏப்ரல் மாதம் திறக்கப்படும். 2025-26ம் நிதியாண்டில் காரைக்கால் தடகள ஓட்ட மைதானம் செயற்கை தடகளப்பாதையாக மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் விளையாட்டு திறனை அறிந்து அவர்களுக்கு அந்த விளையாட்டிற்கான பயிற்சிகள் தனியார் பங்களிப்புடன் அளிக்கப்படும்.
ஒவ்வொரு கொம்யூனுக்கும் ஒரு சிறிய விளையாட்டு மைதானம் கிராமப்புறங்களுக்கு அமைத்து தரப்படும். கிராமப்புற விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறனைப் பூர்த்தி செய்ய தரைவிளக்குடன் கூடிய கைப்பந்து மைதானங்கள், சிறிய உள் விளையாட்டு இறகுபந்து மைதானங்கள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு, காது கேளாதோர் விளையாட்டு மற்றும் சிறப்பு ஒலிம்பிக் பாரத் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.