/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
/
ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
ADDED : மார் 20, 2025 04:44 AM
புதுச்சேரி: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
வைத்தியநாதன்(காங்): புதுச்சேரி மாநிலத்தில் ஹெல்மெட் கட்டாயம் என பலமுறை அறிவிப்பு வருகிறது. போலீசார் அபராதம் விதிக்கின்றனர். ஆனால், முழுமையாக செயல்படுத்துவதில்லை. கட்டாய ஹெல்மெட் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? கட்டாய ஹெல்மெட்டை செயல்படுத்த முடியாமல் உள்ளதற்கான காரணம் என்ன.
அமைச்சர் நமச்சிவாயம்: மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 129ன்படி மோட்டார் சைக்கிள் ஓட்டும், சவாரி செய்யும் ஒவ்வொருவரும் பொது இடம் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். எனவே சட்டத்தை மதிக்கும் புதுச்சேரியின் ஒவ்வொரு குடிமகனும், பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி அரசு பிரசாரமும் தொடங்கியுள்ளது. இதுவரை 37,107 வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வைத்தியநாதன் (காங்): மது, கஞ்சா போதையில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறது. குடும்ப தலைவர்கள் இறப்பதால் அந்தகுடும்பம் நிற்கதியாகிறது. பொருளாதார ரீதியாக அந்த குடும்பங்கள் நிலைகுலைந்து போய்விடுகின்றன. ஹெல்மெட் அணிவதை நெறிமுறைப்படுத்த வேண்டும்.
அப்போது எம்.எல்.ஏ.,க்கள், ராமலிங்கம், சம்பத் ஆகியோர், நகர பகுதியில் ஹெல்மெட் அணிய விலக்கு தாருங்கள், நீண்டதுாரம் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்துங்கள் என்றனர்.
அமைச்சர் நமச்சிவாயம்: பல்வேறு புற நகர் பகுதியிலிருந்து ஹெல்மெட் அணிந்து வருபவர்கள், நகர பகுதியை அடைந்ததும் கழட்டி வைக்க வேண்டுமா.
அங்கிருந்து ெஹல்மெட் அணிந்து வந்தவர்கள் நகர பகுதியில் அணிந்து செல்ல முடியாதா. இதை எப்படி நடைமுறைப்படுத்த முடியும். சுப்ரீம் கோர்ட் இந்த சட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சாலை விபத்திற்கான காரணங்களை கேட்கிறது. ெஹல்மெட் அணிய பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
நாஜிம்(தி.மு.க): அபராதம் விதிப்பதால் ஏழைகள் தான் கஷ்டப்படுகின்றனர். அவர்களின் ஆர்.சி., புக்கை பெற்றுக்கொள்ளுங்கள். ஹெல்மெட் வாங்கி அணிந்த பிறகு பைக்கினை கொடுத்து விடுங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: இது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும். இப்படி செய்தால் மக்களுக்கு அதிருப்தி தான் ஏற்படும். ெஹல்மெட் சம்பந்தமாக எம்.எல்.ஏ.,க்கள் கருத்தை ஏற்கிறோம். எம்.எல்.ஏ.,க்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்போம்.