/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முழு கட்டண விலக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முழு கட்டண விலக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முழு கட்டண விலக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முழு கட்டண விலக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ADDED : மார் 27, 2025 03:52 AM
புதுச்சேரி: சட்டசபையில் உயர் கல்வி குறித்து அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்;
பிரதான் மந்திரி உச்சதர் சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ், புதுச்சேரி தாகூர் கலை அறிவியல் கல்லுாரி, மாகே மகாத்மா காந்தி அரசு கலை கல்லுாரி, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லுாரிகளின் தரத்தை மேம்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் ரூ.5 கோடி வழங்க உள்ளது.
பிரதான் மந்திரி உச்சதர் சிக் ஷா அபியான் திட்டத்தின் பாலின உள்ளடக்கம், சமபங்கு முன் முயற்சியில் புதுச்சேரி மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சகம் ரூ.10 கோடி வழங்க உள்ளது. இதன் மூலம் மாணவிகளுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
வருமான உச்சவரம்பு மாற்றம்
காமராஜர் நிதியுதவி திட்டத்தில் 2024-25ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தில் பெற்றோரின் வருமான உச்ச வரம்பு ரூ. 8 லட்சம் வரை 100 சதவீதம், 8 லட்சத்திற்கு மேல் 50 சதவீத நிதியுதவி கிடைக்கும்.
முழு கட்டண விலக்கு
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2023-24 கல்வியாண்டு முதல் முழு கட்டண விலக்கு அளிக்கப்படும்.
அனைத்து படிப்புகளுக்கும் காமராஜர் நிதியுதவி திட்டம்
2025-26ம் கல்வியாண்டு முதல் சென்டாக் மூலம் பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், கலை அறிவியல், வேளாண்மை, சட்டம் போன்ற அனைத்து பிரிவுகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேர ரூ. 20 ஆயிரமாக கல்வி நிதியுதவி திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது.
100 சதவீதம் கட்டணம் தள்ளுபடி
2024-25 கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வியாக 100 சதவீத கல்வி கட்டண தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் 2022-23ம் கல்வியாண்டு முதல் மகளிர் பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இலவச பஸ் திட்டம்
பள்ளி கல்வியில் உள்ளது போல் கல்லுாரி மாணவிகள் பயன்பெறும் வகையில் பாரதிதாசன் பெண்கள் கல்லுாரி, புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து நகர, கிராமப்புற கல்லுாரிகளுக்கு இலவச பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் பகுதிகளிலும் இலவச பஸ் இயக்கப்படும்.
சென்டாக் கட்டணம் ரத்து
சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் முழுமையாக விலக்கு அளிக்கப்படும். தொழில்நுட்ப பல்கலைக்கு நிலம் கொடுத்த வாரிசுதாரர்களுக்கு பணியிடம் வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள்
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் 66 விரிவுரையாளர் மற்றும் 63 அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோல் அரசு கல்லுாரிகளில் தேவையான 283 விரிவுரையாளர்கள், 63 அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்.