/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
/
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ADDED : ஏப் 28, 2025 04:25 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாறிவிட்டன. எனவே கல்வியாண்டும் மாறியுள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் மார்ச் வரை கல்வியாண்டு கணக்கிடப்படுகிறது.
ஏப்ரல் மாதம் கல்வியாண்டு துவங்கியதும், அடுத்த வரும் மே மாதம் விடுமுறை விடப்படுகிறது.
இதன்படி, வரும் 30ம் தேதி முடிந்ததும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு ஒரு மாதம் விடுமுறை விடப்படும். ஆனால் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விட வேண்டும் என அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்த அமைச்சர் நமச்சிவாயம் மூன்று நாட்களுக்கு முன்கூட்டியே புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று 28 ம்தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் வழக்கம்போல் செயல்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

