/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து விவகாரத்தில் பாரபட்சம் இன்றி நடவடிக்கை : அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

ADDED : டிச 25, 2025 05:20 AM
புதுச்சேரி: போலிமருந்து விவகாரத்தில் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: போலி மருந்து விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யபட்டு உள்ளனர். இதில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் முதல்வர், அமைச்சர்களை ஆதாரமின்றி குற்றம் சாட்டுவது கண்டிக்கதக்கது.
போலிமருந்து விவகாரத்திற்கும் தொழில்துறைக்கும் சம்பந்தம் இல்லை. இது மருந்து கட்டுப்பாட்டுத்துறை, சுகாதார துறையை சார்ந்தது. தொழிற்சாலை என்ற முறையில் அதற்கு அனுமதி கொடுப்பது மட்டுமே தொழில்துறை வேலை. தொடர்ந்து, அவர்கள் மருந்து உற்பத்தி செய்வதில் தலையிடுவதில்லை.
கடந்த 2017ம் ஆண்டு காங்., ஆட்சியில் முன்னாள் முதல்வர் நாராயணாமி ஆட்சி காலத்தில் தான் மருந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.
பா.ஜ., கட்சி யாரையும், எந்த தகுதியும் இல்லாதவர்களை பதவியில் அமர்த்தாது. பா.ஜ.,வில் சரியான நேரத்தில், உரிய பதவி வழங்கப்படும்.
இதே காங்., கட்சியினர் சி.பி.ஐ விசாரணை கேட்டனர். ஆனால் இன்று சி.பி.ஐ., விசாரணை என்றவுடன், நீதிபதி தலைமையில் விசாரணை என்கின்றனர். சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டு இதுவரை 16 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.