தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்வான எஸ்.ஐ.,களுக்கு ஒரு வாரத்தில் பணி ஆணை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

 தேர்வான எஸ்.ஐ.,களுக்கு ஒரு வாரத்தில் பணி ஆணை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

 தேர்வான எஸ்.ஐ.,களுக்கு ஒரு வாரத்தில் பணி ஆணை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்


ADDED : பிப் 27, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ.,களுக்கு ஒரு வாரத்திற்குள் பணி ஆணை வழங்கப்படும் என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 125 போலீசார்களுக்கு பணியாணை வழங்கும் விழா நேற்று மாலை கம்பன் கலையரங்கில் நடந்தது. விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது;

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு, போதை பொருள் தடுப்பு நடவடிக்கை, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தல், சைபர் குற்றங்களை தடுத்தல் என, அனைத்து நடவடிக்கையிலும், போலீஸ் துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது. மக்கள் மன்ற நிகழ்ச்சி மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

ஆபரேஷன் திரிசூல் மூலம், தொடர் குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் கண்காணித்து, கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். ஆபரேஷன் விடியல் மூலம் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. போலீஸ் துறையில் பல ஆண்டுகளாக இருந்து வந்த காலி பணியிடங்கள், 2022ம் ஆண்டு முதல், நிரப்பி வருகிறோம். இதுவரை 1,546 பணியிடங்கள் நிரப்பி உள்ளோம்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ.,களுக்கு ஒரு வாரத்திற்குள் பணி ஆணை வழங்கப்படும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us