/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அம்பேத்கர் பிறந்த நாள் நடைபயணம் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
/
அம்பேத்கர் பிறந்த நாள் நடைபயணம் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
அம்பேத்கர் பிறந்த நாள் நடைபயணம் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
அம்பேத்கர் பிறந்த நாள் நடைபயணம் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
ADDED : ஏப் 14, 2025 04:23 AM

புதுச்சேரி:புதுச்சேரி, நேரு யுவ கேந்திரா, தேசிய சேவை திட்டம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபயண நிகழ்ச்சி நடந்தது.
தாவரவியல் பூங்காவில் துவங்கிய நடைப்பயணத்தை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, துவக்கி வைத்து பங்கேற்றார். அமைச்சர் சாய் சரவணன் குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். புஸ்சி வீதி வழியாக கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறைவு பெற்றது. இதில், மாணவர்களுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., மற்றும் அரசு அதிகாரிகள் நடைப்பயணமாக சென்று, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சக அரசு செயலர் சுந்தரேசன், என்.எஸ்.எஸ்., மாநில அதிகாரி சதீஷ் குமார் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
அதிகாரிகளுக்கு 'டோஸ்'
நடை பயணமாக கடற்கரை சாலை, அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு மாணவர்களுடன் சென்ற அமைச்சர் நமச்சிவாயம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார்.
அப்போது, அரசு சார்பில் மணி மண்டபம் சுத்தம் செய்யப்படாமல், சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் இருந்தது. இதனால், டென்ஷன் ஆன அமைச்சர் நமச்சிவாயம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரிகளை கடுமையாக கடிந்து கொண்டார்.

