/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச மனைப்பட்டா வழங்க அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு
/
இலவச மனைப்பட்டா வழங்க அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 22, 2024 05:38 AM

திருக்கனுார்: சந்தை புதுக்குப்பம், தேத்தாம்பாக்கத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி, சந்தை புதுக்குப்பம், தேத்தாம்பாக்கம் கிராம ஆதிதிராவிடர் மக்கள் இலவச மனைப்பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அக்கிராமங்களில் இலவச மனைப்பட்டா வழங்குவதற்கான இடங்களை தேர்வு செய்ய அமைச்சர் நமச்சிவாயம் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின், பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தேத்தாம்பாக்கத்தில் சேதமடைந்துள்ள அரசு பள்ளி கட்டடத்தை பார்வையிட்ட அவர், அதனை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், வில்லியனுார் சப் கலெக்டர் சோமசேகர அப்பராவ் கொட்டாரு, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.