/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சினிமாவில் நடிக்கலாம், அரசியலில் நடிக்க முடியாது சீமான் குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

ADDED : ஜன 26, 2025 05:19 AM

சிதம்பரம்: ''சினிமாவில் நடிக்கலாம், அரசியலில் நடிக்க முடியாது'' என சீமான் குறித்து, சிதம்பரத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
தன்னை நம்பி வந்த தொண்டர்களை அரவணைத்து கட்சி நடத்த வேண்டும்.
ஆனால், அதிகாரம் இல்லாமல், தன் அதிகாரத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் சீமான் காட்டி வருகிறார். சீமான் பேசுவது, பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அவரின் பேச்சு உளறலாக உள்ளது.
தி.மு.க., 6 முறை ஆட்சியில் இருந்தும், தொண்டர்களை அரவணைத்து செல்வதால்தான் 75 ஆண்டு காலமாக கொண்டாடும் கட்சியாக தி.மு.க., உள்ளது. சினிமா துறை ஒதுக்கி விட்டதால், இயக்குநர் மற்றும் நடிகராக தொடர முடியாததால், தற்போது அரசியல் போர்வையை போர்த்திக்கொண்டு வருகிறார்கள்.
கடந்த காலத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பார்கள், ஆனால் இப்போது தெற்கே வாழ்கிற நிலையை உருவாக்கியது தி.மு.க., தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து பிரிவினர் முன்னேற்றத்திற்கு வித்திட்டு, முன்னேற்ற மாநிலமாக தமிழகம் அமைந்ததற்கு காரணம் திராவிட ஆட்சிதான்.
சினிமாவில் ஒரிஜினாலிட்டி இல்லை. சினிமாவில் 100 பேரை அடிப்பது போல் காட்டுவார்கள். அது ஒரிஜினல் இல்லை. ஆனால் ஒரிஜினலாக இருப்பது தி.மு.க.,தான். சினிமாவில் நடிக்கலாம், அரசியலில் நடிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.