UPDATED : ஜூலை 01, 2026 04:38 PM
ADDED : ஜூலை 01, 2026 04:31 PM
புதுச்சேரி:புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான போட்டி நடந்தது.
சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம், யோகாசன பாரத் இணைந்து மாவட்ட யோகாசன போட்டி லாஸ்பேட்டை பல்நோக்கு விளையாட்டரங்கில் 2 நாட்கள் நடந்தது. இப்போட்டிகளில், 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளின் நிறைவு விழாவை சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க தலைவர் ஆனந்தபாலயோகிபவனானி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சங்க துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார். செயலாளர் தயாநிதி ஆண்டு அறிக்கை வாசித்தார். அமைச்சர் சிவக்கொழுந்து, செந்தில் எம்.எல்.ஏ., இந்தியன் வங்கி ஊழியர் சங்க தலைவர் ரேணுகாதாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சங்க மூத்த துணைத்தலைவர் தேவசேனாபவனானி, பொருளாளர் சண்முகம், உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
சங்க துணை செயலாளர் ரீனாஜோசப் நன்றி கூறினார்.
