/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி பரிசு தொகுப்பு அமைச்சர் வழங்கல்
/
தீபாவளி பரிசு தொகுப்பு அமைச்சர் வழங்கல்
ADDED : அக் 20, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் திருமுருகன் துவக்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு சர்க்கரை, சமையல் எண்ணெய், ரவை, மைதா உள்ளிட்ட ரூ.585 மதிப்புள்ள பொருட்கள் தீபாவளி தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இத்திட்டத்தை கடந்த 17ம் தேதி தட்டாஞ்சாவடி தொகுதி, திலாஸ்பேட்டையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 64 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி இலவச தொகுப்பு வழங்கும் பணியை கோவில்பத்து ரேஷன் கடையில் அமைச்சர் திருமுருகன் துவக்கி வைத்தார்.