/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூப்பந்தாட்ட போட்டி அமைச்சர் பரிசளிப்பு
/
பூப்பந்தாட்ட போட்டி அமைச்சர் பரிசளிப்பு
ADDED : ஜூலை 30, 2025 11:37 PM

காரைக்கால்:காரைக்காலில் நடந்த பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.
காரைக்காலில், அந்தோணி சுழல் கோப்பை ஐவர் பூப்பந்தாட்ட முதலாம் ஆண்டு போட்டி கடந்த 26 மற்றும் 27 ம் தேதிகளில் நடந்தது. போட்டியை நாஜிம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். போட்டியில் முதலிடத்தை திருவாரூர் அணியும், 2ம் இடத்தை யூ.பி.பி.சி., காரைக்கால் அணியும், 3ம் இடத்தை எம்.பி.பி.எஸ்., காரைக்கால் அணியும், நான்காம் இடத்தை அத்திவெட்டி அணி பிடித்தன.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழல் கோப்பைகளை அமைச்சர் திருமுருகன் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், முருகானந்தம், செந்தில், மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

