ADDED : நவ 23, 2024 06:40 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : தேசிய அளவிலான டென்னிஸ் வாலிபால் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சீருடை வழங்கி வழியனுப்பி வைத்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருரில் இன்று(23ம் தேதி) துவக்கி மூன்று நாட்கள் தேசிய அளவிலான டென்னிஸ் வாலிபால் விளையாட்டுப் போட்டி நடக்கிறது. இப்போட்டியில், பங்கேற்பதற்காக புதுச்சேரி டென்னிஸ் வாலிபால் அசோசியேஷன் சார்பில் 16 விளையாட்டு வீரர்கள் நேற்று முன்தினம் பெங்களூரு புறப்பட்டு சென்றனர்.
அவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம், சீருடை மற்றும் உபகரணங்கள் வழங்கி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். இதில், புதுச்சேரி டென்னிஸ் வாலிபால் அசோசியேஷன் தலைவர் ஜான் அம்ப்ரோஸ், செயலாளர் எழில்ராஜன், பயிற்சியாளர் பூவரசன் உடனிருந்தனர்.
