/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதியுதவி
/
கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதியுதவி
ADDED : ஜூலை 16, 2025 11:29 PM

திருக்கனுார் : செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் திருப்பணிக்காக அமைச்சர் நமச்சிவாயம் 3 லட்சம் ரூபாய் நிதியை கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி, செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன், செல்வ முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் திருப்பணிக்காக நிதியுதவி அளிக்கும்படி, தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான நமச்சிவாயத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் நேற்று கோவிலில் நடந்து வரும் திருப்பணியினை பார்வையிட்டு, தனது சொந்த செலவில் முதற்கட்டமாக ரூ. 3 லட்சம் நிதியுதவியை கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார். கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.