குப்பைகளை முறையாக அகற்றாத நிறுவனத்திற்கு அமைச்சர் எச்சரிக்கை
குப்பைகளை முறையாக அகற்றாத நிறுவனத்திற்கு அமைச்சர் எச்சரிக்கை
ADDED : அக் 29, 2026 03:52 AM

காரைக்கால்: திருநள்ளாறில் குப்பைகளை முறையாக அகற்றாத தனியார் நிறுவனத்திற்கு அமைச்சர் ராஜசேகரன் எச்சரிக்கை விடுத்தார்.
காரைக்கால் மாவட்டம் முழுதும் குப்பைகளைச் சேகரித்து அகற்றும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனமான ஹெச்.ஆர். ஸ்கொயர் மேற்கொண்டு வருகிறது.
திருநள்ளாறு பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றுவதில்லை என, பக்தர்கள் அமைச்சர் ராஜசேகரனிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று திருநள்ளாறு பகுதியில் அமைச்சர் ஆய்வு செய்து, துாய்மைப் பணியை மேற்கொள்ளும் ஹெச்.ஆர். ஸ்கொயர் நிறுவன மேலாளரை அழைத்து, குப்பைகளை முறையாக அகற்றாதது குறித்து கேள்வி எழுப்பினார். திருநள்ளாறில் மீண்டும் இதுபோன்ற துாய்மையற்ற நிலை காணப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன்இருந்தனர்.
