/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் அடையாள அட்டையை திருக்கனுாருக்கு மாற்றிய அமைச்சர்
/
வாக்காளர் அடையாள அட்டையை திருக்கனுாருக்கு மாற்றிய அமைச்சர்
வாக்காளர் அடையாள அட்டையை திருக்கனுாருக்கு மாற்றிய அமைச்சர்
வாக்காளர் அடையாள அட்டையை திருக்கனுாருக்கு மாற்றிய அமைச்சர்
ADDED : ஜூலை 17, 2025 12:40 AM
புதுச்சேரி,: மண்ணாடிப்பட்டு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதை உறுதிப்படுத்தும் வகையில், தனது வாக்காளர் அடையாள அட்டையை அமைச்சர் நமச்சிவாயம் திருக்கனுாருக்கு மாற்றியுள்ளார்.
வில்லியனுார் தொகுதி மணவெளியை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ.,வில் இணைந்து, மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும், தொகுதி மக்களிடம் நெருக்கம் குறைந்ததால், கடந்த லோக்சபா தேர்தலில் தனது சொந்த தொகுதியில், எதிர்க்கட்சி வேட்பாளரைவிட குறைந்த ஓட்டுகளை பெற்றார். இதற்கிடையே, வரும் 2026ம் சட்டசபை தேர்தலில் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்த அமைச்சர் நமச்சிவாயம், திருக்கனுாரில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் குடியேறியுள்ளார். மேலும், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, உடனடியாக நிவர்த்தி செய்தும் வருகிறார். தொகுதியை சுற்றி வந்து அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
மேலும், தனது மற்றும் குடும்பத்தினர் வாக்காளர் அடையாள அட்டையை திருக்கனுார் பகுதிக்கு மாற்றும் முடிவு செய்தார். நேற்று, தனது வாக்காளர் அடையாள அட்டையை திருக்கனுார் பகுதிக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றினார். இது, தொகுதி மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதுடன், வரும் சட்டசபை தேர்தலில் அமைச்சர் நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.