/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிறிஸ்துவ, தலித் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி; ஓம்சக்தி சேகர்
/
கிறிஸ்துவ, தலித் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி; ஓம்சக்தி சேகர்
கிறிஸ்துவ, தலித் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி; ஓம்சக்தி சேகர்
கிறிஸ்துவ, தலித் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி; ஓம்சக்தி சேகர்
ADDED : ஜூலை 12, 2025 03:20 AM
புதுச்சேரி: கிறிஸ்துவ மற்றும் தலித் எம்.எல்.ஏ.,க்கள் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, என்.ஆர்.காங்., ஆட்சி அமைத்தது. அப்போது, வெற்றி பெற்ற 2 சிறுபான்மை இனத்தை சேர்ந்த கிறிஸ்துவ எம்.எல்.ஏ., களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
ஆனால், அவர்களுக்கு உரிய பங்களிப்பை தராமல், பா.ஜ., மற்றும் என்.ஆர்.காங்., கட்சியில் இருந்த தலித் இனத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தலித் இனத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய வைத்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் சிறுபான்மை இனத்தை சேர்ந்த கிறிஸ்துவ மற்றும் தலித் எம்.எல்.ஏ.,களில் தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கி, மக்களுடைய நம்பிக்கை பெற வேண்டும் என முதல்வர் ரங்கசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.