/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயிர் உற்பத்தி ஊக்கத் தொகை அமைச்சர் வழங்கல்
/
பயிர் உற்பத்தி ஊக்கத் தொகை அமைச்சர் வழங்கல்
ADDED : அக் 15, 2025 11:05 PM

காரைக்கால்: காரைக்காலில் வேளாண்துறை சார்பில், நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்கத் தொகை வழங்கினார்.
காரைக்காலில் வேளாண்துறை சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் திருமுருகன் முன்னிலையில் வகித்தார். கலெக்டர் ரவிபிரகாஷ் வரவேற்றார்.
கூட்டத்தில், மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்த 1,182 பொது மற்றும் அட்டவணை விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்க தொகையாக ஏக்கருக்கு 5 ஆயிரம் வீதம் 1 கோடியே 18 லட்சத்து 73 ஆயிரத்து 820 ரூபாயை வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,நாஜிம், நாகதியாகராஜன், ராஜசேகரன், துணை கலெக்டர் பூஜா, வேளாண்துறை கூடுதல் இயக்குநர் கணேசன், கடைமடை விவசாய சங்கத் தலைவர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.