தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சீருடை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சீருடை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சீருடை வழங்கல்


ADDED : ஆக 28, 2025 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 02:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: சுத்துக்கேணி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் தையல் கட்டணத்தை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை மூலம் இலவச சீருடை மற்றும் தையல் கட்டணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதன்படி, சுத்துக்கேணி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு சீருடை மற்றும் தையல் கட்டணம் வழங்கினார்.

இதில், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், அ.தி.மு.க., நிர்வாகி பாஸ்கரன், முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், நிர்வாகிகள் தமிழ்மணி, கலியபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, மண்ணாடிப்பட்டு, திருக்கனுார், கொடாத்துார், சந்தை புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் தையல் கட்டணத்தை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us