/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.ஐ., போலி சான்றிதழ் விவகாரம் வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை
/
என்.ஆர்.ஐ., போலி சான்றிதழ் விவகாரம் வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை
என்.ஆர்.ஐ., போலி சான்றிதழ் விவகாரம் வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை
என்.ஆர்.ஐ., போலி சான்றிதழ் விவகாரம் வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை
ADDED : நவ 07, 2024 02:49 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, போலி என்.ஆர்.ஐ., சான்றிதழ் அளித்த விவகாரம் தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
புதுச்சேரியில் இளநிலை மருத்துவ படிப்பிற்கு சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் மொத்தம், 116 இடங்கள் உள்ளன.
இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 37 மாணவர்கள் சேர்ந்தனர். மூன்றாம் கட்ட கலந்தாய்வில், 79 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து, மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., இடங்கள் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனையொட்டி, 'சீட்' பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களை, அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய துாதரகங்களுக்கு அனுப்பி சென்டாக் அதிகாரிகள் விசாரித்தில், 11 பேரின் சான்றிதழ்கள் போலி என்பதை கண்டுபிடித்து, அவர்களை நீக்கினர்.
தொடர் விசாரணையில் மேலும் 25 பேர் போலி சான்றிதழ் சமர்ப்பித்திருப்பது தெரிய வந்தது. ஆஸ்திரேலியா, அரபு நாட்டு துாதரகங்களுக்கு அனுப்பிய பல சான்றிதழ்களின் உண்மை நிலை இன்னும் தெரியவில்லை.
இதனால் சென்டாக் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியை நாடினர். அதன்பேரில் வெளியுறவுத்துறை அமைச்சகம், விசாரிக்க வேண்டிய மாணவர்களின் சான்றிதழ்களை பெற்று சம்மந்தப்பட்ட நாடுகளில் உள்ள துாதரகங்களுக்கு அனுப்பி, அதை சரி பார்க்க அறிவுறுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் மேலும் பல மாணவர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.