/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுபான்மையினர் ஆணையம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
சிறுபான்மையினர் ஆணையம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
சிறுபான்மையினர் ஆணையம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
சிறுபான்மையினர் ஆணையம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : டிச 19, 2024 05:52 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசினார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள்., கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், 'புதுச்சேரியில் சிறுபான்மையினர் ஆணையம் அமைப்பதற்கு அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.
விரைவில் சிறுபான்மையினர் ஆணையம் புதுச்சேரியில் அமைக்கப்படும்.
இதன் மூலம் சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படும்' என்றார். புதுச்சேரியில் முதன்முறையாக சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
ஆணையம் அமைத்த பிறகு சேர்மன் ஒருவர், நியமிக்கப்படுவார். கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்த ஒருவரும், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒரு வரும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். மேலும் சிறுபான்மையினர் விவகாரங்களை அணுக அனுபவம் வாய்ந்த ஒருவர் மூன்றாவது உறுப்பினராக நியமிக்கப்படுவார்.