/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரயிலில் தவறிவிட்ட நகை ஒப்படைப்பு
/
ரயிலில் தவறிவிட்ட நகை ஒப்படைப்பு
ADDED : அக் 19, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரயிலில் தவறிவிட்ட தங்க நகையை ரயில்வே போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர்.
பெங்களூரு எஸ்வந்த்பூரில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயிலில் ஏ-1 பெட்டியில் சென்னை, சூளைமேட்டை சேர்ந்த பிரவீன்குமார், 35, என்பவர் வந்தார்.
அவர் அணிந்திருந்த 2 சவரன் செயின் மாயமானதாக ரயில்வே போலீசில் புகார் அளித்தார். உடனே அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ்காரர் ராமமூர்த்தி ஏ-1 ரயில் பெட்டியில் சென்று தேடிப்பார்த்தார். அப்போது அங்கே கிடந்த தங்க செயினை மீட்டு, பிரவீன்குமாரிடம் ஒப்படைத்தார்.
மேலும் மற்றொரு பயணி தவறவிட்ட மொபைல் போனையும் போலீசார் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.