UPDATED : நவ 13, 2026 11:15 PM
ADDED : நவ 13, 2026 11:12 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சினிமா தியேட்டரில் தவறவிட்ட தங்க நகையினை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 32; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 9ம் தேதி புதுச்சேரி - கடலுார் சாலையில் உள்ள தனியார் மாலில் உள்ள தியேட்டருக்கு குடும்பத்துடன் படம் பார்க்க சென்றார். மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பும்போது அவரது குழந்தை அணிந்திருந்த 4 கிராம் தங்க செயின் மாயமானது.
இதுகுறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின்பேரில், உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் செயினை மீட்ட போலீசார், ஸ்ரீதரிடம் ஒப்படைத்தனர்.
