தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 5 பேர் மீண்டும் சிறையிலடைப்பு

போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 5 பேர் மீண்டும் சிறையிலடைப்பு

போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 5 பேர் மீண்டும் சிறையிலடைப்பு


UPDATED : நவ 13, 2026 11:24 PM

ADDED : நவ 13, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 11:24 PM ADDED : நவ 13, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே நடந்த கொலை வழக்கில் ஐந்து பேரை போலீசார் காவல் எடுத்து விசாரித்து விட்டு, மீண்டும் சிறையில் அடைத்தனர்.

வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டில் கடந்த 9ம் தேதி மாலை அரும்பார்த்தபுரம் முரளி, 22, என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இது குறித்து வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ஆத்துவாய்க்கால்பேட் தீனா என்பவரை போலீசார் அன்று இரவு கைது செய்தனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய ஆத்துவாய்க்கால்பேட்டை சேர்ந்த சரத், விஷ்வா, அரவிந்தன் மற்றும் பிரதீப் ஆகியோர் புதுச்சேரி கோர்ட்டில் தேதி 11ம் தேதி சரணடைந்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து பேரையும் நேற்று முன்தினம் போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த ஜன., மாதம் ஆத்துவாய்க்கால்பேட் பிரபாகரன் மகன் ஜனா படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்கு பழியாக அவரது தம்பி தீனா தலைமையில் முரளியை கொலை செய்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து ஆத்துவாய்க்கால்பேட்டை சேர்ந்த தீனா, 20; சரத், 21; விஷ்வா, 22; அரவிந்தனர், 27; அரும்பார்த்தபுரம் பிரதீப், 22, ஆகிய ஐந்து பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வினித், சவுத்ரி, பரணி, கோகுல் மற்றும் ஸ்ரீராம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us