sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாயமான மாணவர் மீட்பு

 மாயமான மாணவர் மீட்பு

 மாயமான மாணவர் மீட்பு


ADDED : பிப் 26, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 05:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார், கூடப்பாக்கம் ரோடு, மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் சரவணன். இவரது17 வயது மகன், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 21ம் தேதி மதியம் நீட் மாடல் தேர்வு எழுத வீட்டில் இருந்து சைக்கிள் மூலம் பள்ளிக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.

இது குறித்து அவரது தாய் புஷ்பா கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் சேலம் ரயில்வே போலீசார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வில்லியனுார் போலீசார் சேலம் சென்று மாணவரை மீட்டு வந்து, நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் தேர்வு சரியாக எழுதாததால் விரக்தியடைந்து வீட்டை விட்டு வெளியேறி வில்லியனுார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து விழுப்புரம் ரயிலில் சென்று, அங்கிருந்து சேலம் வழியாக சென்ற எஸ்பிரஸ் ரயிலில் சென்றபோது, டிக்கெட் பரிசோதகர் பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்ததுதெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us