/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மிஷன் வீரமங்கை பயிற்சி முகாம் நிறைவு
/
மிஷன் வீரமங்கை பயிற்சி முகாம் நிறைவு
ADDED : ஆக 10, 2025 08:44 AM

புதுச்சேரி : புதுச்சேரி காவல் துறை சார்பில், 'மிஷன் வீரமங்கை' தலைப்பில் நடந்த தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
கூடப்பாக்கம் அண்ணாமலை ரெட்டியார் அரசு மேல்நிலை பள்ளியில் 'மிஷன் வீரமங்கை' தற்காப்பு கலை பயிற்சி, சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில் நடந்தது. இதில், 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளை சேர்ந்த மாணவிகள் 180 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பத்து நாட்கள் நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.
துணை முதல்வர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். பயிற்சியில் சிறந்து விளங்கிய 10 மாணவிகளுக்கு வீரமங்கை விருதும், பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், போலீசார், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக, பயிற்சி பெற்ற மாணவிகள், தாங்கள் கற்ற தற்காப்பு கலையை போலீசார் முன்னிலையில் செயல் விளக்கமாக காண்பித்தனர்.