/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேப் ஜெமினி நிறுவன போட்டியில் எம்.ஐ.டி., கல்லுாரிக்கு முதல் பரிசு
/
கேப் ஜெமினி நிறுவன போட்டியில் எம்.ஐ.டி., கல்லுாரிக்கு முதல் பரிசு
கேப் ஜெமினி நிறுவன போட்டியில் எம்.ஐ.டி., கல்லுாரிக்கு முதல் பரிசு
கேப் ஜெமினி நிறுவன போட்டியில் எம்.ஐ.டி., கல்லுாரிக்கு முதல் பரிசு
ADDED : நவ 01, 2024 05:42 AM

புதுச்சேரி: கேப் ஜெமினி நிறுவனத்தின் நேர்மறை - எதிர்கால சவாலுக்கான தொழில்நுட்ப போட்டியில் எம்.ஐ.டி.,கல்லுாரி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.
கேப் ஜெமினிநிறுவனம், இந்தியாவில் முதன் முறையாக 'சின்க்ரோனி' எனும்ஹைதராபாத் நிறுவத்துடன் இணைந்து 'கேப் ஜெமினி-டெக் பாசிட்டிவ் - பியூச்சர் சேலஞ்ச் - யூத் வாய்ஸ் எடிஷன்'என்ற கல்லுாரி மாணவர்களுக்கான போட்டியை சென்னையில் நடத்தியது.
இப்போட்டியில் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 15 மாணவர் அணிகள் பங்கேற்றன. இதில், புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லுாரியின் 5 அணிகள் பங்கேற்றன. அதில், 2 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வானது. அதில், கலைச்செல்வி, அபிநயா, அஸ்வின், பரணிதரன், காந்தி ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் முதல் பரிசு வென்றனர்.
இதில் மாணவர்கள் தங்கள் முன்மாதிரி திட்டத்தை தொழில் துறையை சேர்ந்த நிபுணர் குழுவிடம் காட்சிப்படுத்தி விளக்கினர். டி.என்.எஸ் இந்தியா பவுண்டேஷன், கேப் ஜெமினி வல்லுனர் குழு, கல்லுாரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார்மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன் துறைதுணைப் பேராசிரியர் ஜாஸ்மின் சுசீலா ஆகியோர் வழி நடத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு லெனோவா டேப், ஹெட்போன்கள், பவர் பேங்க், ஸ்மார்ட் வாட்ச்,பேக்-பேக் என, 5 பரிசுகள் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், ட்ரஸ்டி வேலாயுதம், எம்.ஐ.டி., கல்லுாரி முதல்வர் மலர்க்கண் ஆகியோர் பாராட்டினர்.