தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் எம்.எல்.ஏ., ஆலோசனை
தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் எம்.எல்.ஏ., ஆலோசனை
UPDATED : அக் 20, 2026 08:05 PM
ADDED : அக் 20, 2026 08:02 PM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, நேரு எம்.எல்.ஏ., உள்ளாட்சி துறை இயக்குநரிடம் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி நகராட்சி மூலம், உருளையன்பேட்டை தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, நேரு எம்.எல்.ஏ., உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆதாஷை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறப்பது, அங்கு பொதுமக்கள் அமர்வதற்கு போதுமான இருக்கைகள் அமைத்தல், பெரிய மார்க்கெட்டை நவீனப்படுத்துவது, உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் துார்வாரி, கொசு மருந்து அடிப்பது, குப்பைகளை தினசரி அப்புறப்படுத்துவது, வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நாய்களை பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை உடனடியாக ஒதுக்கி, உருளையன்பேட்டை தொகுதியில், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது, சாலை மேம்பாடு, வாய்க்கால்கள் அமைத்தல், நேரு நகர், முல்லை நகர், கென்னடி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
