ADDED : அக் 20, 2026 08:05 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தலைமை என்.ஆர்., சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கத்தை அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
புதுச்சேரி ஈ.சி.ஆர்., கொட்டுப்பாளையம் பகுதி நவீன சுகாதார மீன் அங்காடி அருகில் உள்ள என்.ஆர்.காங்., தொழிற்சங்கத்துடன் இணைந்து செயல்படும் இச்சங்கத்தை, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் கவுரவத் தலைவர் ராமகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் ஞானம் மற்றும் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சுற்றுலா பேருந்து, வேன், கார் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் நலனைக் கருதி இந்த இடம் திறக்கப்பட்டுள்ளது.
