/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொகுதி மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., ஆலோசனை
/
தொகுதி மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : மே 16, 2025 02:24 AM

புதுச்சேரி:உப்பளம் தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மத்திய சாலை மற்றும் கட்டடம் செயற்பொறியாளர் சீனிவாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
உப்பளம் தொகுதியில் அப்துல்கலாம் குடியிருப்பு கட்டடப்பணிக்கு ஒப்புதல் கோப்புகள் தலைமைச் செயலகம் சென்றிருக்கிறது. இதற்கு அரசு செயலர் முத்தம்மா விரைவில் ஒப்புதல் அளிப்பதாக உறுதியளித்துள்ளார். பணிகளை விரைவில் துவங்க கேட்டுக் கொண்டார். மேலும் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள கோலாஸ் நகர் - நேதாஜி நகர் இணைப்பு உப்பனாறு பாலம் அகலப்படுத்தும் பணியினை தொடங்க வேண்டும்.
வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த அலேன் வீதி, நேரு வீதி, பெருமாள் ராஜா வீதி, காளியம்மன் தோப்பு, முருகசாமி தோப்பு, சின்ன எல்லையம்மன் கோவில் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி, கஸ்துாரிபாய் வீதி, காமராஜர் வீதி மற்றும் அப்துல்கலாம் வீதி, சந்தாசஹிப் வீதி, மீலாத் வீதி, மொரேசன் வீதி, லதிப் சந்து, பாண்டியன் சந்து, அப்பாமேஸ்திரி வீதி, பொண்ணியாகுட்டி வீதி, வ.உ.சி., வீதி மற்றும் நைநியப்பா பிள்ளை வீதிகளிலும் சிமென்ட் சாலை குறித்து ஆலோசனை நடந்தது.
இளநிலை பொறியாளர் ராமன், தொகுதி செயலாளர் சக்திவேல், காங்., கமிட்டி உறுப்பினர் ராஜ்குமார், கிளை செயலாளர் ராகேஷ் உடனிருந்தனர்.