/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வளர்ச்சி பணிகள் குறித்து எம்.எல்.ஏ., ஆலோசனை
/
வளர்ச்சி பணிகள் குறித்து எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : ஜூலை 26, 2025 08:17 AM

புதுச்சேரி : பெரியகாலாப்பட்டு கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமையில் கருவடிக்குப்பம் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பெரிய காலாப்பட்டைச் சேர்ந்த முருகேசன், மூர்த்தி, ரவி, குமார், மஞ்ஜினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், பெரிய காலாப்பட்டு கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலத்திட்ட பணிகள் குறித்தும், கிராம வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொகுதி வளர்ச்சிப் பணிகளில் தனிக்கவனம் செலுத்தி வரும், எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரத்திற்கு பாராட்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.