/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச மனைப்பட்டா குறித்து அதிகாரியுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
/
இலவச மனைப்பட்டா குறித்து அதிகாரியுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
இலவச மனைப்பட்டா குறித்து அதிகாரியுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
இலவச மனைப்பட்டா குறித்து அதிகாரியுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : மே 14, 2025 06:59 AM

புதுச்சேரி : ஆதி திராவிடர் நலத்துறை மூலம் உப்பளம் தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நலத்துறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
உப்பளம் தொகுதி, ஆட்டுப்பட்டி, நேதாஜி நகர் 2, வெங்காயத்தோப்பு மற்றும் ரோடியர்பேட் பகுதி களில் வாழும் ஏழை மற்றும் சமூகப் பின்தங்கிய மக்களுக்கு இலவச மனைப் பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதற்கான முயற்சியில் தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி நடவடிக்கை மேற்கொண்டார்.
இது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் வலியுறுத்தி வந்தார். இதையடுத்து நிலம் பெறுவற்கான உரிமமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் சிறப்புக் கூறு நிதி மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டம் தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவனை, அனிபாலன் கென்னடி எம்.எல்.ஏ., நலத்துறை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்க, அரசே நேரடியாக நிலங்களை கைப்பற்ற வேண்டும். இல்லையெனில் உரிமையாளர்களுக்கு நிலம் வழங்க இயலாவிட்டால், நிதி வழங் கும் ஏற்பாடு செய்யலாம் என, வலியுறுத்தினார். இதனை கேட்ட ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, உறுதியளித்தார்.