/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து முறைகேடு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி எம்.எல்.ஏ., மனு
/
போலி மருந்து முறைகேடு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி எம்.எல்.ஏ., மனு
போலி மருந்து முறைகேடு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி எம்.எல்.ஏ., மனு
போலி மருந்து முறைகேடு விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கோரி எம்.எல்.ஏ., மனு
ADDED : டிச 04, 2025 05:11 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து முறைகேடுகளை விசாரிக்க சி.பி.ஐ.,க்குபரிந்துரை செய்ய வேண்டும் என,கவர்னர், முதல்வருக்கு நேரு எம்.எல்.ஏ., மனு அனுப்பியுள்ளார்.
மனுவில், புதுச்சேரியில் மருத்துவத்துறை ஊழல் மற்றும் போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முறைகேடுகளில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. போலி மருந்து கொள்முதல் வழக்கில், முன்னாள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
போலி மருந்து தயாரித்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு போலி மருந்து கொள்முதல், போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் செய்த முறைகேடுகளின் பின்னனியில் சில முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் இருப்பதாக தெரிகிறது. அவர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வர போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் முறைகேடுகளுக்கு உறுதுணையாக இருந்த உண்மை குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை உள்ளது.
இந்த முறைகேடுகளில் கடந்த கால ஆட்சியாளர்களுக்கும், தற்போது ஆளும் ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது.
முறைகேடுகளை செய்ய துாண்டிய அரசியல் வாதிகளை வழக்கில் சேர்க்காமல் தப்பிக்க விடுகின்றனர்.எனவே, முறைகேடுகளை விசாரிக்க, அரசு சி.பி.ஐ.,க்கு, பரிந்துரைக்க வேண்டும். இல்லையென்றால் அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

