/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
/
மின்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : ஆக 14, 2025 01:17 AM

புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதியில் மின்துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.
நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்தில், மின்துறை பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உருளையன்பேட்டை தொகுதி சுதேசி மில் வளாகத்தில் புதிய துணை மின்நிலையம் அமைத்து, தடையில்லாமின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கடா நகர் துணை மின் நிலையத்திலிருந்துகோவிந்த சாலை, கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு மற்றும் அந்தோணியார் கோவில் தெரு அரசு குடியிருப்புகளுக்கு நேரடியாக மின் விநியோகம் வழங்க வேண்டும்.முல்லை நகர் மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளில் நிலவி வரும் மின்னழுத்த குறைபாடுகளை சரி செய்ய புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.