/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு குடியிருப்பில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
அரசு குடியிருப்பில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : பிப் 15, 2025 04:55 AM

புதுச்சேரி : கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு புனரமைப்பு பணிகளை நேரு எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கண்டாக்டர் தோட்டப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 450க்கும் மேற்பட்ட அரசு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்புகளில் ஸ்மார்ட் சிட்டி நிதி உதவியுடன் ரூ.5 கோடி செலவில் புதுப்பித்தல் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை நேற்று நேரு எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். பணிகளை வேகப்படுத்தி முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது பொதுப் பணித்துறை அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உடனி ருந்தனர்.