/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்கன்வாடி கட்டும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
அங்கன்வாடி கட்டும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 12, 2025 03:22 AM

புதுச்சேரி: குபேர் நகரில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணியினை நேரு எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.
உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், வாடகை கட்டடங்களில் இயங்கி வருவதால், சொந்த கட்டடம் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, குபேர் நகர், 5-வது குறுக்கு தெருவில், அரசுக்கு சொந்தமான இடத்தில், புதுச்சேரி நகராட்சி மூலம் ரூ. 34 லட்சத்து 32 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ., நேரு தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.
புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் குப்புசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.