/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 34.33 லட்சத்தில் பாலம் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ. 34.33 லட்சத்தில் பாலம் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ. 34.33 லட்சத்தில் பாலம் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ. 34.33 லட்சத்தில் பாலம் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : டிச 20, 2025 06:29 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில், 34.33 லட்சம் ரூபாய் மதிப்பில், வடிகால் மற்றும் பாலம் கட்டும் பணியை, சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முதலியார்பேட்டை தொகுதி, பி.எஸ்.சி., வங்கி நகர், கலைவாணி தெருவில், வடிகால் கால்வாய், குறுக்கே பாலம் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்க, 34.33 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணியை, சம்பத் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர்ப்பாசனப் பிரிவு செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரிதிவிராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.